திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல், வாந்திபேதி வயிற்று வலி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இதில் பாதிக்கப்படுபவர்களும், கருக்கலைப்பிற்காகவும் பொதுமக்கள் டாக்டர்களின் ஆலோசனையின்றி நேரடியாக மருந்து கடைகள், மளிகை கடைகள் மற்றும் பெட்டிக் கடைகளுக்கு சென்று மாத்திரைகளை (செட் மாத்திரைகள்) வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் பக்க விளைவுகள் ஏற்படும். எனவே பொதுமக்கள் கடைகளில் நேரடியாக மருந்து, மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்த்து உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி ஆகியவற்றினை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் கடைகள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Vandavasi news and t.v.malai news uploaded in tamil.vandavasi memes also uploaded. its a differnt newsport form vandavasi